அதிநவீன இயந்திரம்: எப்படி வந்தது; அதிர்ச்சியில் இலங்கை அரசு!
13 May,2019
கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் இன்று பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடக்கின்றன.
இலங்கைக் கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.