சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது..!
12 May,2019
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் மட்டக்களப்பு சவுக்கடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 16 பேரில், 3 பேரை பொலிஸார், மட்டக்களப்பு சவுக்கடியில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் 13 பேர் தப்பியோடிய நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு, கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.