தற்கொலைதாரிகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? !
07 May,2019
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்களாக 14 கோடி ரூபா பணம் மற்றும் 700 பெறுமதியான ஏனைய சொத்துக்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணையில் இனங்கண்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதில் 14 கோடி ரூபா பணத்தில் ஒரு பகுதியை குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்ள்ளதுடன், ஏனைய பணம் வங்கிக்கணக்குகளில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வங்கியிலுள்ள பணத்தையும், சொத்துக்களையும் முடக்கியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷாட் வெளிநாட்டில்; வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை!
மன்னார் – தாராபுரம் துர்கி நகர் பகுதியிலுள்ள வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று பகல் சோதனை செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துவருகின்றார். கடந்த வாரம் அவர் மஸ்கட் நகரிற்கு விஜயம் மேற்கொண்டார்.
நாட்டில் இல்லாத சமயம்பார்த்து அமைச்சர் பதியூதீனின் இல்லத்தை முப்படையினருடன் இணைந்து பொலிஸாரும் சோதனையிட்டிருக்கின்றனர்.
இந்த சோதனையின்போது எந்தவித சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அந்த வீட்டின் வளாகத்திலிந்து கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.