அதிகாலை வேளையில் மரத்தில் தூக்கில் தொங்கிய இளம் தாய்: மரணத்திற்கான காரணம் என்ன?
07 May,2019
வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையில் குறித்த பெண் அவரது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் நேற்றையதினம் வீடு திரும்பிய சமயத்தில் இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டிற்கு முன்பாகவுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், 10 மற்றும் 6 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய சதீஸ்குமார் நவநீதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர், வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.