சஹ்ரானின் மைத்துனர் மற்றும் உதவியாளர் இருவரும் சிக்கினார்கள்!
04 May,2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மைத்துனர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் சவுதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவிலும் சிலரை அந்த நாட்டு புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்திய புலனாய்வு பிரிவினர் கைது செய்தவர்களிட் நடத்திய விசாரணைகளின் போதே சஹ்ரானின் மைத்துனர் தொடர்பில் அவர்கள் தகவல் வெளியிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாற்றுப் பெயர்களிலேயே சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.