இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இவர்களே காரணம்! வெளியானது புகைப்படம்!
02 May,2019
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.இந்த தாக்குதலை நடத்திய 9 பேரின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் மட்டக்குளி பகுதியில் வசித்த அலாவூதீன் அஹமட் மூவாத் என்ற நபரால் நடத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
காத்தான்குடி மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மிகமத் ஹாஷிம் மொஹமத் சஹரான் மற்றும் முகமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத் ஆகியோரே ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியின் மீது தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த மொஹமத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமத் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
முகமத் அசாம் முகமத் முபாரக் என்ற நபரே கிங்ஸ்பெரி நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர், கம்பளை பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் ஜமீல் முகமது என போலீசார் குறிப்பிடுகின்றனர்.பாத்திமா இல்ஹாம் என்ற பெண்மணி தெமட்டகொடை - மஹவில பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முகமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்தின் மனைவியே, பாதீமா இல்ஹாம்.
நீர்கொழும்பு - கடுவாபிட்டிய தேவாலயத்தின் மீது ஆஜ் முகமத் முகமது ஹஸ்துன்னீனால் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தின் மீது காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முகமத் நாஷர் முகமத் அசாத் என்ற நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த 9 பேர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்கள் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.