சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 இந்தியர்கள் கைது
02 May,2019
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 48 இந்திய நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம மற்றும் பெந்தர ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ள இவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 42 பேர் விசா காலம் முடிவடைந்தும் நாட்டில் தங்கியிருந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.
ஏனைய ஆறு பேர் நாட்டிலிருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் மிரிஹான விஷேட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.