தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் சஹ்ரான் அல்ல! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்
02 May,2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாத குழுவின் தலைவர் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரான் ஹசீம் அல்ல என அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், “கடந்த நாட்களாக ராஜபக்சர்கள் இந்த அரசாங்கத்தின் மீதே தாக்குதல் மேற்கொண்டார்கள். அரசாங்கத்தின் மீது சில பலவீனங்கள் காணப்பட்டன.
பிரதமர் மற்றும் எங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து தெரியாது. எனினும் அதனை காரணம் காட்டி பொறுப்பில் இருந்து மீறி செல்ல முடியாது.
இந்த அனைத்து தலைவர்களையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடிந்தமை எங்கள் அதிஸ்டமாகும். சஹ்ரான் இந்த திட்டத்திற்கு தலைவர் அல்ல. அவர் ஒரு இலங்கையராகும்.
அத்துடன் அவர் தலைமைத்துவம் வழங்கியிருந்தால் தற்கொலை குண்டுத்தாரியாக செயற்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் அதற்கு தலைமைத்துவம் வழங்கியவரை நாங்கள் கைது செய்துவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.