ஐ.எஸ்ஸின் இலக்குக்குள் இலங்கையின் முக்கிய 8 அரசியல்வாதிகள்! புலனாய்வுத்துறை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
02 May,2019
இலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமான அரசியல்வாதிகள் எட்டுப் பேரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஐ .எஸ் அமைப்பு தயாராகி வருவதாக பாதுகாப்பு தரப்புக்கு தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து , ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கத்தோலிக்க தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகள் உட்பட ஏனையவழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்த கொள்ள வேண்டாம் எனவும் அரச தலைவர்களிற்கு புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றால் ஹெலிகொப்டரில் செல்லுமாறும், தரைவழிப் பயணங்களை மேற் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.