வவுனியாவில் மீண்டும் இராணுவத்தினரின் சோதனை சாவடி
01 May,2019
வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் இன்று (01) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இவ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் குறிப்பிட்ட சில சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் இலக்கங்கள் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, வவுனியாவில் 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.