இயக்கச்சியில் இராணுவ சீருடை வைத்திருந்த ஸ்லாமியதையல் கடை உரிமையாளர் கைது
28 Apr,2019
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அனுமதி இன்றி இராணுவத்தின் சீருடை தைத்திருந்தார் என்று இஸ்லாமிய தையல் கடை உரிமையாளர் ஒருவர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று காலை இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடாத்திய சுற்றி வளைப்பில் இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள தையலகத்தில் அனுமதி இன்றி இராணுவத்தின் ஆடை தைத்ததாக தெரிவித்து இஸ்லாமியர் ஒருவர் ; கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடம் பளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.