கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில், முக்கிய தற்கொலைதாரிகளின் குடியிருப்பான வெடிப்பு ஏற்பட்ட கொழும்பு, தெமட்டகொடை வீட்டிலிருந்து, முக்கிய சில பொருட்களும் மற்றும் வணாத்தவில்லு பகுதியிலிருந்து சிலபொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தற்கொலைத் தாக்குதலில், ஈடுபட்ட இரு சகோதரர்களுடையதும், பிரபல வர்த்தகருடையதுமான தெமட்டகொடை வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு பல பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த வீட்டிலிருந்து, சுமார் 30 மில்லியன் ரூபா, 15 மில்லியன் ரூபா பெறுமதியான 3 இரத்தினக்கற்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் 15 மில்லியன் ரூபா பணமும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள், நகைகள் என்பனவற்றை பொலிஸார் குறித்த தெமட்டகொட வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலைக்காக பயன்படுத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படும், துப்பாக்கியொன்றை நிந்தவூரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்தும், மற்றொரு துப்பாக்கியை வணாத்தவில்லு பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ரி-56 ரக துப்பாக்கியொன்றும், 6 ரிவோல் துப்பாக்கிகளும் மற்றும் பெருமளவு வெடிபொருட்களும் குறித்த வணாத்தவில்லு காணியிலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பல ஆதாரங்களைப்பெற்ற பொலிஸார், கடந்த ஞாயிற்க்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடையை பூட்டிவிட்டு கடைக்குள் தலைமறைவாகியிருந்த இரு சகோதரர்களும் பிடிபட்டது எவ்வாறு?
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வேன் வண்டியும் வேன் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை குறித்து நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல் அராபி முஸ்லிம் பாடசாலை போன்ற சந்தேகமான இடங்களை நேற்று நாவலபிட்டி பொலிஸார் இராணுவத்தினர் விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வேன் வண்டி ஒன்று மீட்கபட்டுள்ளதோடு, வேன் வண்டியின் சாரதியையும் நாவலபிட்டி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யபட்ட வேன் சாரதியிடம் விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வேன் யாருடையது இந்த வேனில் பயணித்தவர்கள் யார் என விசாரணைகைள மேற்கொண்ட போதே கொழும்பில் மேற்கொள்ளபட்ட பிரதான குண்டுதாரிகள் இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகிள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நான் தான் குறித்த வேன் வண்டியில் ஏற்றிவந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் என பொலிஸாருக்கு குறித்த வேன்சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சாரதியினால் வழங்கபட்ட வாக்குமூலத்தின் மூலமாக கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தினை நாவலபிட்டி பொலிஸார் சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் போடப்பட்டிருநத பூட்டிளை உடைத்து பாதணி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.