கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து
28 Apr,2019
தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது