எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த
24 Apr,2019
எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை.
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.