இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: வெடி பொருள் நிரப்பிய ஒரு லாரி, வேன் கொழும்பில் நுழைந்திருப்பதாக போலீஸ் உஷார்
23 Apr,2019
இத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது என்கிறார் கொழும்புவில் உள்ள தமிழ் செய்தியாளர் ஒருவர்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை நான்கு மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.