இராணுவத்துக்கு செயற்பட அவசரகாலச் சட்டம் தேவை : இராணுவத் தளபதி
22 Apr,2019
இராணுவத்தினருக்கு தற்பொழுது நாட்டில் உள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவசரகாலச் சட்டத்தை சில நாட்களுக்காவது அமுல்படுத்த வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு சர்வதேச தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வெடிப்புச் சம்பவத்தை முன்னெடுத்த அமைப்பு தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இராணுவத்துக்கு சோதனையிடுவதற்கும், கைது செய்வதற்கும் சட்ட ரீதியில் அதிகாரம் தேவை. இதற்கு அவசரகாலச் சட்டம் தேவை. இந்த வெடிப்புச் சம்பவங்கள் வனாத்தவில்லு சம்பவத்துடன் தொடர்புபடுகின்றது. அந்தக் காலத்திலிருந்து பொலிஸாரும் இராணுவமும் இணைந்து செயற்படாமை ஒரு குறைபாடாகும்.
இந்த தாக்குதல் குறித்து பொலிஸார் அறிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இராணுவத்தினர் இது குறித்து அறிந்திருக்க வில்லையெனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.