தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!
21 Apr,2019
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கட்டமொன்றில் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸார் சுற்றிவளைத்து தற்போது துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிதாரிகளை துரத்திச் சென்றபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டதில் மூன்று பொலிஸார் தற்போது உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ள நிலையில், சந்தேகநபரை துரத்திச் சென்றபோது பொலிஸார் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.