நீர்கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய மகிந்த
21 Apr,2019
நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த நபர் பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது தற்கொலை தாக்குதல் என கூறப்படுகிறது.
அத்துடன் நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பெரும்பாலானவை தற்கொலை குண்டு தாக்குதல் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பலமான பாதுகாப்பு இருந்திருந்தால் இப்படி நடக்குமா? மகிந்த கேள்வி
இன, மத, கட்சி பேதங்களை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் நிதானமாகவும் யோசனையோடும் நாட்டு மக்கள் செயற்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்தார்.
கந்தானை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களை நீர்கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த சம்பவங்களைப் பார்க்கும் போது கடந்த காலத்தில் கெப்பத்திகொல்லாவையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம்தான் நினைவுக்கு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. பொது மக்கள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு குறித்து தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் ? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
பாதுகாப்பு என்று ஒன்று நாட்டில் பலமாக இருந்திருந்தால், இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்க மாட்டாதல்லவா? எனவும் அவர் பதிலளித்தார்.