மதூஸ் டுபாயில் தங்குவதற்கான சாத்தியப்பாடுகள் ?
21 Apr,2019
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஸை இலங்கைக்கு நாடு கடத்துவது தவிர்க்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளா்.
மதூஸுக்கு இலங்கையில் பல குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும், டுபாயில் அவருக்கு எதிராக கொக்கேன் பயன்படுத்திய குற்றச்சாட்டு மாத்திரமே பதிவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டு சட்டத்தின்படி இரண்டு வருட சிறைத்தண்டனையோ அல்லது 5 லட்சம் ரூபா அபராதமோ அல்லது இரண்டுமோ கிடைக்கப் பெறலாம்.
மதூஸுக்கு டுபாயில் வீடு இருப்பதனால், அவர் அந்நாட்டில் வியாபார நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இன்றைய சகோதர தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.
இருப்பினும், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 2 ஆம் திகதி டுபாய் நீதிமன்ற தீர்ப்பில்தான் தங்கியுள்ளது.
மதூஸுடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் இதுவரையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.