மஹிந்த கொச்சிக்கடைக்கு விஜயம் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி
21 Apr,2019
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு உட்பட ஏனைய பிரசேதங்களில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையான கண்டிக்கத்தக்கது.
புனிதமான தேவாலயங்களை மையப்படுத்தி வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையானது கொடூரமான நினைவுகளை மீள் திருப்பியுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் இதனூடாக ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைத்து மக்களும் பொறுப்புடனும், ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும். இக்கட்டான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மற்றும் பிரச்ச ரணதுங்க ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் !
இலங்கையின் பல பாகங்களில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை இலங்கையின் 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், 2. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 160 க்கும் மேற்பட்டடோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு கொச்சிக்கடையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.