தேவையற்ற வரி அறவீடு காரணமாக பண்டிகைக்காலத்தில் பொருட்களின் விலை
17 Apr,2019
இந்த அரசாங்கம் தேவையற்ற விதத்தில் வரி அறவிடுவதன் காரணமாக பண்டிகைக்காலத்தில் பொருட்களின் விலை அதிகரித்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் பாரிய தோல்வி ஒன்றை சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கார்ல்டன் இல்லத்திற்கு இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.