இன்று திருப்பதி செல்கிறார் சிறிலங்கா அதிபர்
16 Apr,2019
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
குடும்பத்தினருடன், வழிபாடு செய்வதற்காக இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இறங்கும் சிறிலங்கா அதிபர், அங்கிருந்து திருமலைக்குச் செல்லவுள்ளார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு திருமலையில் நடைபெறும், சுப்ரபாத சேவையில் சிறிலங்கா அதிபர் குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபாடு செய்யவுள்ளார்.
அதன் பின்னர், திருமலையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்படுவார்.
நாளை இரவு பெங்களூரு வழியாக சிறிலங்கா திரும்பவுள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா அதிபரின் திருப்பதி பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.