கமாண்டோ றெஜிமென்டின் கட்டளை அதிகாாியாக சவேந்திர சில்வா நியமனம்
08 Apr,2019
போா் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான மேஜா் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் கமாண்டோ றெஜிமென்டின் கட்டளை அதிகாாியாக கணேமுள்ள நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவர் இதுவரை காலமும் கட்டளை தளபதியாக கடமையாற்றும் கஜபா ரெஜிமன்ட்டுக்கு மேலாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கணேமுல்லையில் உள்ள கமான்டோ ரெஜிமன்ட் தலைமையகத்தில் வைத்து நேற்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சவேந்திர சில்வா 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த பொழுது பெண்கள்,குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.