பின்கதவு வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த சிறிலங்கா அதிபர்
04 Apr,2019
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நேற்று பின்கதவு வழியாக நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தினர்.
இதனால், நாடாளுமன்றச் சுற்றுவட்ட வீதி சிறிலங்கா காவல்துறையினரால் மூடப்பட்டது.
இதனால், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சிறிலங்கா அதிபரின் வாகன அணியின் பாதை மாற்றப்பட்டது.
நாடாளுமன்ற முன்வாயில் வழியாக செல்ல முடியாததால், பின்வாயில் வழியாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.