பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்ளவே கோட்டாபய வெளிநாடு சென்றுள்ளார்
01 Apr,2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தனது இரட்டைப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்வதற்காகவே அமெரிக்கா சென்றுள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ. உபுல் தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ அன்றி வேறு யாரும் இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.