விபச்சார விடுதி சுற்றி வளைப்பு : ஏழு பெண்கள் கைது
23 Mar,2019
கல்கிஸை பிரதேசத்தில் இருவேறுபட்ட இடங்களில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கல்கிஸை – களுபாதை இரத்மலான பகுதியிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விபச்சார விடுதிகளின் முகாமையாளரென சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 27, 29, 32 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்வதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.