தமிழர்களின் மிகுதிக்காணிகளையும் விடுவிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்
07 Mar,2019
யாழ். பலாலியில் சிங்கள இனவாத அரசு சுவிகரித்த தமிழர் நிலங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
வட தமிழீழம் , சென்றுள்ள அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக இன்று (புதன்கிழமை) பலாலிக்கு சென்றார்.
அங்கு விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் பாடசாலைகளை பார்வையிட்ட அவர் யாழ்ப்பாண சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் முகமாக மிகுதி காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.