குழுவாக நின்று நாட்டை முன்னேற்ற எடுத்த முயற்சி தோல்வி: பிரதமர்
25 Feb,2019
ஒரு குழுவாக நின்று நாட்டை முன்னேற்றுவதற்கு கடந்த காலத்தில் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்கையொன்றுக்கு ஏற்ப எந்தவொரு குழுவுடனும் இணைந்து பணியாற்ற முடியுமான ஒரு நிலைமை நாட்டில் காணப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மஹியங்கன மாவட்ட தொழிலாளர் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்குவதில்லையென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பது பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க தடையாகவுள்ளதாக ஆளும் கட்சியினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.