இலங்கையில் 45 – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் இன மனிதர்கள்;
21 Feb,2019
இலங்கையில் 45ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன் இன மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குரங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆஃபிரிக்காவிற்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில் இலங்கையின் மழைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன் இன மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் தற்பொழுது கிடைக்கப்பபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கற்களால் ஆன நூதனமான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆராட்சியாளர்கள் கூறியுள்ளனர்