பயங்தரவாத தடைச்; சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் ;
13 Feb,2019
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை நடைபெற்ற அடுத்த தினமான 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கொண்டுவரப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் நடை முறையிலிருந்ததோடு அதன் பின்னர் காலத்திற்குக் காலம் கொண்டுவரப்பட்ட சில புதிய விதிகளிலுமுள்ள சகல கட்டுப்பாடுகளும் அமுலில் இருந்தன.
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யபபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதாவதுரூபவ் அவசர கால ஒழுங்கு விதிகள்ளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் விடுதலையாவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் எவருமே விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அறிவித்து ஜந்து நாட்களில் அதாவது ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அப்போது சட்டமா அதிபராக கடமையாற்றிய மொஹான் பீரிஸ்ரூபவ் அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்ட போதிலும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றே தெரிவித்திருந்தார்
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையானது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு காத்திரமான நடவடிக்கை எனவும் இந்த அவசரகால ஒழுங்கு விதிகள் ;நீக்கப்பட்டுள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகம் அப்போதைய நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
நீதி அமைச்சராலும்;; சட்ட மாஅதிபரினாலும் ஒன்றிற்கொன்று முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதியில் எதுவுமே நடைபெறாமல் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலும் சிறையிலும் புனர்வாழ்வின் கீழும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி அவசரகால ஒழுங்குவிதிகள் நீக்கப்பட்டு விட்டன என அரசினால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவசரகால ஒழுங்குவிதிகளில் முக்கியமான சில விதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் உட்புகுத்தப்பட்டு நிரந்தரமாக சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதுதான் நிதர்சனமான உண்மை. அவசரகால நிலை தொடர்ச்சியற்றதாகி ஏறத்தாழ ஒரு வாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குறிப்பிட்ட சில ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறியது
ஆனால் அத்தகைய ஒழுங்கு விதிகள் எவையும் காணப்படவில்லை. மாறாக அவைரூபவ் அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அறிவித்த நான்காவது நாளான 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27ஆவது பிரிவில்ரூபவ் தமிழீழ விடுதலை புலிகளை தடை செய்தல் அவசரகாலநிலை ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் நீடிப்பு அவசரகாலநிலை தொடர்ச்சியற்றதாகிய போதிலும்ரூபவ் பல்வேறு அவசரகால ஒழுங்குவிதிகளைத் தொடர்தல். சந்தேக நபர்களை தடுத்து வைத்தல்ரூபவ் முன்னரே அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்துவைப்பதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் ரூபவ் சரணடைந்த நபர்களை புனர்வாழ்வின் கீழ் வைத்திருத்தல் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகள் முழுவதும் ஒரு புதிய சட்டவாக்கத்தின் விளைவைக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தின் தத்துவத்தை சட்டமுறையின்றி தன்னிச்சையாக எடுத்து சில ஏற்பாடுகளையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடதக்கதாகும். இந்நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதன் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் நீக்கப்படவில்லை.
அதேபோன்று தான் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்க்க முடியாது. மேலும் அச்சட்டமானது பிரஜைகளை ஒருவித அச்சமானதும் பதற்றமானதுமான சூழலுக்குள் வைத்திருப்பதற்கே வித்திடுகி;ன்றது என்றார்