விசா விதிமீறல் - இலங்கையில் 73 இந்தியர்கள் கைது
02 Feb,2019
இலங்கையில் உரிய விசா இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில், தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மட்டுகாமா பகுதியில் ஒரு தொழிற்சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 49 இந்தியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, கடந்த மாதத்தில் இன்கிரியா பகுதியில் 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று தெரிவித்த அதிகாரிகள், கைதான அனைவரும் மிரிஹானா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டனர்