கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் குறித்து தீர்மானமில்லை
26 Jan,2019
கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பது குறித்து அமெரிக்க அரசாங்கம் எந்தவித வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவ தளமொன்றை கிழக்கில் திருகோணமலையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகமும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முழுமையான தெளிவுபடுத்தல் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலலித்த அமைச்சர் இது விடயம் தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.