திருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்
19 Jan,2019
2006 ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரiணைகளையோ அல்லது ஏனைய முக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையோ அரசாங்கம் அலட்சியம் செய்யவோ கைவிடவோயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில விசாரணைகள் பல காலம் நீடிக்ககூடியவை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் குறிப்பாக படையினர் தொடர்பான விசாரணைகள் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்
இவ்வாறான விடயங்கள் காரணமாக குழப்பங்கள் ஏற்படுகின்றன,நாங்கள் அவற்றின் ஊடாக விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டியுள்ளது,அதேவேளை நாங்கள் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பதை நிச்சயமாக தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாணவர்கள் படுகொலை குறித்த விசாரணைகளிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு விரைவில் ஆறுதல் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்