ஆசியக் கண்டத்திலேயே சம்பந்தனைப் ஒரு தலைவரைப் பார்க்கக் கிடைக்காது
14 Jan,2019
வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டவுடன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தமைக்கான காரணத்தை, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வெளிப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி செவ்வி ஒன்றிலேயே அவர் இதற்குப் பதிலளித்துள்ளார்.
“நான் ஆளுனர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மூத்த, கெளரவமான அரசியல்வாதியாகவே இரா.சம்பந்தனைப் பார்க்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் மூத்த உறுப்பினராகப் பல ஆண்டுகளாக பதவி வகிக்கிறார்.
சமநிலைக்கான அரசியலைக் கொண்டு வருவதற்காக ஜன நாயக ரீதியில் பேச்சுகளை நடத்துவதிலும் அவர் முன்னின்று செயற்படுகிறார்.
எவ்வளவுதான் விமர்சனங்களை முன்வைத்தாலும், வீழ்த்த நினைத்தாலும் அனைவரையும் தந்தை போல் அரவணைத்துத் தமது கடமையைச் செய்து வருகிறார்.
இந்த வயதிலும் இதே மூச்சுடனும், பேச்சுடனும் தமிழ் மக் களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்.
ஆசியக் கண்டத்திலேயே அவரைப் போல் ஒரு தலைவரைப் பார்க்கக் கிடைக்காது.
யாழ்ப்பாண மண்ணில் காலடி வைப்பதற்கு முன்னர், அவரைச் சந்திக்காமல் வந்திருந்தால் அது தவறாக அமைந்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்