கடந்த வருடம் இலங்கைக்கு 23 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
06 Jan,2019
கடந்த வருடம் இலங்கைக்கு 23 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபை இன்று வெளியிட்ட விபரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தைய சுற்றுலாப் பயணிகள் வருகை அதற்கு முன்னைய வருடத்தைய வருடத்தைக் காட்டிலும் 10,3 சதவீதம் அதிகமானதாகும்.அதாவது 2017 ஆம் ஆண்டில் 21 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகை தந்த அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் 23 இலட்சம் பேர் வருகை தந்தனர்.
கடந்த வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும்போது டிசம்பரிலேயே அதிக எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள்(250,000 பேர்) வந்திருந்தனர் என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.