முற்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரி தயார் நிலையில்!
06 Jan,2019
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும்.
இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்தப் பின்னணியிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரை அவர் மாற்றியுள்ளார் என்றும், மாகாணங்களுக்கு ஆளுனர்களாக தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.