இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலே என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருக்கிறார்.
அரசியலமைப்பை மீறிச்செயற்பட்டதாக நாட்டின் அதியுயர் நீதித்துறை அமைப்பான உச்சநீதிமன்றத்தினாலேயே குறைகாணப்பட்டவரே இன்று ஜனாதிபதியாக இருக்கிறார். அவர் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் மதிப்பிழந்தவராகவே நோக்கப்படுகிறார்.
அதனால் அந்தக் கறையைப் போ்குவதற்கு புதியதொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு வசதியாக முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.