மைத்திரியால் பெயர் நீக்கப்பட்டவர்களின் விபரங்கள்
21 Dec,2018
பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதுடன், 29 பேர் அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதந்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதிலும் குழப்பங்கள் ஏற்பட்டமையின் காரணமாக காலத்தாமதம் ஏற்பட்டது.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சி தாவியவர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலருக்கும் அமைச்சு பதவி வழங்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்திருந்தார்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய பெயர் பட்டியலில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் பலரது பெயர்களை ஜனாதிபதி நீக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஜனாதிபதியால் பெயர் நீக்கியதாக சொல்லப்படும் உறுப்பினர்களும் அவர்களுக்கு வழங்கப்படவிருந்த அமைச்சு பதவிகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில்,
“டி.எம் . சுவாமிநாதன் – மீளிக்குடியேற்றம், புனர்வாழ்வு – வடக்கு அபிவிருத்தி, ஏ .எச் .எம் .பௌசி – தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சரத் பொன்சேகா – கிராமிய பொருளாதார அபிவிருத்தி , கால்நடை அபிவிருத்தி, விஜிதமுனி சொய்சா – மீன்பிடி நீரியல் வளத்துறை
ரங்கே பண்டார – நீர்ப்பாசன , இடர் முகாமைத்துவம், பியசேன கமகே – மாகாண சபைகள் உள்ளூராட்சி, வசந்த சேனநாயக்க – தொலைத்தொடர்பு – டிஜிட்டல் வசதிகள், மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற மறுசீரமைப்பு” ஆகிய உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன