ஐஸ்கிரீமை மாறி மாறி ஊட்டி விட்ட மைத்திரி-ரணி
19 Dec,2018
அக்டோபர் 26 திடீரென ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, அதிரடியாக மகிந்தவை பிரதமர் ஆக்கினார் மைத்திரி. இதனால் உலகமே இலங்கை அரசியல் நிலை தொடர்பாக குழம்பி இருந்தது. இந்த விடையம் எவ்வளவு தூரம் சூடு பிடித்தது என்று அனைவருக்குமே தெரியும். இன் நிலையில் மீண்டும் ரணிலை பிரதமராக்கி உள்ளார் மைத்திரி.
இது போக பதவிப் பிரமாணம் முடிய, இருவரும் ஐஸ்கிரீம் கலந்த கேக்கை சாப்பிட்டுள்ளார்கள் (இருவருக்கும் சக்கரை வியாதி உண்டு என்பது வேறு கதைஸ அது ஒரு புறம் இருக்க) இவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டது போதாது என்று , ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஊட்டிவிட்டுள்ளார்கள். தற்போது ஓரம் கட்டப்பட்டுள்ள மகிந்த இந்தக் காட்சியை பார்த்து அதிர்ந்து போயுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இருவரும் 2வது தேன் நிலவுக்கு செல்ல தயார் என்று மகிந்த தனது நண்பர்களோடு நக்கலடித்துள்ளாராம். ரணிலை பற்றி தான் எனக்கு தெரியுமே ஸ அவனுக்கு யாரைப் பிடிக்கும் என்று ஸ அடஉடனே ஞாபகத்திற்கு வருமே ?