அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில்
17 Dec,2018
இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, தான் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு - 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்ததுடன் கடந்த 51 நாட்களாக பிரதமர் ரணில் உள்ளிட்டவர்கள் அலரி மாளிகையிலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.