சிறிசேனவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி – சுதந்திரகட்சியின் 21 பேர் தெரிவித்தது என்ன?
16 Dec,2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் தனியாக பேசுவதற்காக கூட்டம் முடிவடைந்த பின்னரும் காத்திருந்தனர்
ஏதிரணியில் அமர்வதால் எந்த அரசியல் எதிர்காலமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை என சிறிசேனவிடம் தெரிவித்த அவர்கள் எதிரணியில் அமர்வதன் மூலம் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கருத்துக்களையே பிரதிபலிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மாத்திரமே கட்சியை பலப்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தில் இணைந்தாலும் நாங்கள் உங்களிற்கு ஆதரவு வழங்குவோம் என அவர்கள் சிறிசேனவிடம் தெரிவித்தனர்.
இதற்கான வாய்பு கிடைக்காத பட்சத்தில் சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடியாத நிலையேற்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் வெளியிட்ட இந்த நிலைப்பாட்டினால் சிறிசேன அதிர்ச்சியடைந்தவராக காணப்பட்டார் எனினும் அது உங்களுடைய முடிவு என தெரிவித்தார்.
எனினும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கியதேசிய கட்சியுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளப்போவதில்லை என சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.