தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”
15 Dec,2018
நிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது பிரபாகரனுக்கு பதிலாக சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியை பின்னிருந்து சுமந்திரனே இயக்குகின்றார். இவ்வாறு சுமந்திரன் தலைமையில் இயங்கும் அணியிடமும், நிழல் பிரதமராக செயற்படும் சம்பந்தனிடமும் நாட்டைக் கையளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மஹிந்த அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். ஆனாலும் இலஞ்சம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினரகள் உள்ள பாராளுமன்றத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது.
தேர்தலை நடத்தும் பொறுப்புள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவும் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்துவிட்டு, அதனை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கின்றார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”
தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுத் தேர்தல் ஒன்று நடாத்தப்படாத சூழ்நிலையில் நான் பிரதமர் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை. நீதிமன்றின் நீண்ட தீர்ப்பை நான் வாசித்தேன் அதனை மதித்து செயற்பட வேண்டும்.
பாராளுமன்றில் வெறுமனே 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்து இயக்கிக் கொண்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க மறுப்பு தெரிவிக்குமாயின் பாராளுமன்றில் ஐ.தே.க பெரும்பான்மையை இழக்க நேரிடும்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த மூன்றரை வருடங்களில் ஐ.தே.க 20.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது.
நாங்கள் நாட்டின் அபிவிருத்திக்காகவே கடன் வாங்கினோம். அது அனைவருக்கும் தெரிந்த விடயமே ஆனால் அவர்கள் கடன் வாங்கியது தேவயைற்ற செயற்பாடுகளுக்காக. இந் நிலையில் மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்கின்ற பட்சத்தில் மிகுதியிருக்கும் காலத்தில் எவ்வளவு தொகையை கடனாக பெறுவார்கள் எனத் தெரியவில்லை.
டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையவுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பின் போட்டதைப் போன்று பாராளுமன்றத் தேர்தலையும் இந்த அரசாங்கம் பிற்போடும்.
அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரா நாயக்க குமாரதுங்கவிற்கு தெரியாமலேயே விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன் படிக்கையில் ரணில் கைச்சாத்திட்டார். அதே போல ஜனாதிபதிக்கு தெரியாமலேயே பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் எதிர்காலத்தில் செய்யக் கூடும். என மஹிந்த ராஜபக்ஷ தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.