பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடன்பாடு ஒன்றினை மேற்கொள்ளும் வரையில் வேலை நிறுத்தத்தை நிறைவு செய்து மீண்டும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்றும் தேயிலை கைத்தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் எதிர்வரும் 19 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான், மஹிந்தாநந்த அளுத்கமகே உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.