காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை
11 Dec,2018
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க பூரணமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சூழ்நிலையை தெளிவுப்படுத்தவும் அதேநேரம் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயக பகுதிகளான வடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு முன்பும் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்பும் இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இ்நிலையில் சுயாதீனமான ஆணைக்குழு என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.