பொட்டு அம்மானை முடித்துவிட்டோம் - மீண்டும் எழும்புவதென்றால், சடலம்தான் எழ வேண்டும் -
05 Dec,2018
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் பொட்டு அம்மானை போரின் போது நிறைவு செய்துவிட்டோம். மீண்டும் எழும்புவதென்றால், சடலங்கள் தான் எழும்ப வேண்டும். போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். இராணுவத்தினர் கடமைகளை நிறைவு செய்துள்ளனர்.
அத்துடன் தான் யார் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கருணா குறிப்பிட்டுள்ளார்.
கருணா நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். நான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.