பொட்டம்மான் உயிருடன்; கருணாவுக்கு வந்துள்ள புதிய சிக்கல்!
05 Dec,2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய புள்ளியான பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுயிருந்தார். ஆனால் இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இறுதி யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருக்கின்றார்.
வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர் நோர்வேயில் தான் இருக்கின்றார் என்றும் கருணா கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது, யார் இறந்தார்கள் என்பது தொடர்பில் யார் கூறுவது உண்மை என்ற விவாதத்திற்கு இடமின்றி யுத்தத்திற்கு தலைமை தாங்கியவரின் கருத்தினை ஏற்பதுவே பொருத்தமாக இருக்கும். மேலும் இவ்விடயம் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.