மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு? – பதவியையும் துறக்கின்றார்!
02 Dec,2018
நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை (113) ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுதிப்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியை துறக்கும் முடிவையே மஹிந்த அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ள மஹிந்த, பொதுத்தேர்தலை உடனடியாக நடத்துவதற்குரிய வலியுறுத்தலை விடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சிக்கும் அதன் பங்காளிக்கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில்கூட மஹிந்தவின் அறிவிப்பு அமையக் கூடும் என அவருக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.