பொது மக்களுக்கான சேவையை தடையின்றி முன்னெடுங்கள்: ஜனாதிபதி அறிவிப்பு
01 Dec,2018
நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை, மக்களின் பொது வாழ்க்கைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த வழியமைக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொது மக்களுக்கான சேவையை எந்த வித தடையும் இன்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளை தான் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் நெருக்கடிக்கு இரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் எடுப்பார் : சம்பந்தன்
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.