முன்னாள் பிரதமர் ரணிலுக்கு பிரதமர் பதவியை மீண்டும் வழங்குவதில்லையென்ற கலந்துரையாடல்கள்
30 Nov,2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெறவுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அடுத்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இது இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் அடியாக இந்த கலந்துரையாடல்கள் இன்று இடம்பெறுகின்றன.
முன்னாள் பிரதமர் ரணிலுக்கு பிரதமர் பதவியை மீண்டும் வழங்குவதில்லையென்ற தீர்மானத்தில் ஜனாதிபதி காணப்படுகின்றார். இதனை சபதமிட்டும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.முன்னணிக்கு ஆதரவு வழங்குவதனால் ஜனாதிபதிக்கு புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்நிலையிலேயே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சரேசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.