போக்குவரத்துக்காக 8 கோடிக்கு மேல் நாசமாக்கிய மஹிந்த!
29 Nov,2018
நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளார். இந்தப் பயணங்களுக்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்று முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ரவி கருணாநாயக்க .
மேலும் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலத்திற்குள் உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.